சர்வதேச நாணய நிதயத்தின் சிக்கனப் பொதியை அமுல்படுத்துவதன் பாகமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மூன்றாவது நாளாக மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்ற நிலையில் பதட்ட நிலைமை உக்கிரமடைகின்றது.
By the Socialist Equality Party , January 13, 2012
பெருந்தோட்டக் கம்பனிகள் உற்பத்தி இலக்கை அதிகரிப்பதை எதிர்த்து தாம் நடத்தும் போராட்டத்தை காட்டிக்கொடுக்க தொழிற்சங்கங்கள் செய்யும் சூழ்ச்சிகளை வெலிஓயா மற்றும் பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும்.
சு.வ.வ. ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், தொழிலாளர்களின் உரிமைகளை தொழிற்சங்கத் தலைவர்கள் காப்பார்கள் என்ற மாயையை புதுப்பிக்கும் முயற்சியில் நவசமசமாஜக் கட்சி ஏக்கத்துடன் முயற்சிக்கின்றது.
அரசாங்கத்தின் ஓய்வூதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் மீது பொலிசும் இராணுவமும் நடத்திய தாக்குதலில் 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எங்களைச் சந்தித்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம் ஆயிரக்கணக்கானவர்களை அரசியல் கைதிகளாக தடுத்துவைத்திருப்பது ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் தாக்குதல் எனக் குறிப்பிட்டனர்.
அரசியல் கைதிகளும் அவர்களது பெற்றோர்களும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய எதுவும் செய்யாத உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் குற்றஞ்சாட்டினர்.
உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் அண்மையில் விடுதலையான பலருடனும் மற்றும் கைதிகளின் உறவினர்களுடனும் கலந்துரையாடல் நடத்தினர். அவர்கள் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரும் சோ.ச.க.யின் பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இலங்கை அரசாங்கம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, கொழும்பில் இருந்து 66,000 குடும்பங்களை அவர்களது வீடுகளிலும் குடிசைகளிலும் இருந்து வெளியேற்றி நிலத்தை சொத்து உற்பத்தியாளர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் விடுவித்துக் கொடுக்கும் அதன் திட்டத்தை அமுல்படுத்துவதை விரைவுபடுத்தியுள்ளது.
வீட்டுரிமையை காக்கும் நடவடிக்கை குழு, கொழும்பு குடிசைவாசிகளின் வீடுகளை காக்கும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு சகல தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது. வீட்டுரிமையை காக்கும் நடவடிக்கை குழு, மத்திய கொழும்பில் இருந்து 66,000 குடும்பங்களை வெளியேற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை உழைக்கும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் பிரச்சாரம் ஒன்றையும் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் கொழும்பு நகரில் இருந்து 66,000 குடும்பங்களை வெளியேற்ற தயாராகின்ற நிலையில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) இந்த வறிய மக்களுக்காகப் போராடுவதாக காட்டிக்கொள்கின்றது. எவ்வாறெனினும், வலதுசாரி கட்சியான யூ.என்.பி. யின் பிரச்சாரமானது அதனது தேர்தல் வெற்றிகளை முன்னேற்றுவதையே இலக்காகக் கொண்டுள்ளது. நகர்ப்புற வறியவர்களை பாதுகாப்பது அதன் குறிக்கோள் அல்ல.
பின்வரும் புகைப்படக்கட்டுரை, இலங்கையின் மத்திய கொழும்பில் உள்ள சேரிப்புற மக்களின் கொடூரமான வாழ்க்கை நிலமைகளின் ஒரு சிறு பகுதியை வெளிப்படுத்துகின்றது. இந்தப் புகைப்படங்கள் புகைப்பட ஊடகவியாளர் சாந்தன் குமாரசாமியினால் எடுக்கப்பட்டவை.
International Students for Social Equality (Sri Lanka) , June 16, 2011
பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு தமது சம்பளத்தை அதிகரித்துக்கொள்ளவும் நிலைமைகளை மேம்படுத்திக்கொள்ளவும் போராடுவதற்கு உள்ள உரிமையை காத்திடுமாறு இலங்கையில் ஐ.எஸ்.எஸ்.இ. மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கெஹெலியே ரம்புக்வெல்ல நவம்பர் 4 அன்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், “பல்கலைக்கழக மாணவர்களைப் பயன்படுத்தி விரைவில் முன்னெடுக்கவுள்ள இன்னுமொரு கிளர்ச்சி பற்றி” நாட்டின் புலனாய்வுத் துறை “விழிப்புடன்” இருப்பதாகவும் அது பற்றி “தகவல்களைத் திரட்டி வருவதாகவும்” அறிவித்தார்.
Statement of the International Students for Social Equality, November 02, 2010
சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ) அமைப்பு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வழி திறப்பதற்காக இந்த மாதம் இலங்கை அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய உயர் கல்வி சட்டத்தை எதிர்க்குமாறு மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றது. இந்த புதிய சட்டம் இளைஞர்கள் உயர் கல்வியைப் பெறுவதற்கு உள்ள வாய்ப்புக்களை மேலும் குறைப்பதோடு நாட்டின் ...
இந்த சிறிய தீவில் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் நாட்டின் எதிர்க் கட்சிகளுக்கு புறம்பாகவே இடம்பெற்றுள்ளன.